விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் ரௌத்திரம், இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாரி 2, வேலைக்காரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் ரோபோ சங்கர்.

இவரது மகளான இந்திரா சங்கர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த பிகில் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார் இந்திரஜா சங்கர். பிகில் படத்திற்கு பிறகு என்ன படம் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் கொரோனா எல்லாவற்றையும் நிறுத்திவிட்டது.
எப்பொழுதும், சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் அவர் எடுத்த ஒரு போட்டோ ஷுட் மக்களிடம் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் பிகில் பாண்டியம்மாவா இப்படி? என கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.