மறைந்த வடிவேல் பாலாஜி கடைசியாக தன் மகனுக்காக செய்த விஷயம் இதுதான்..! புகைப்படம் இதோ..

பிரபல தொலைக்காட்சியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கடந்த செப்டம்பர் 10ம் தேதி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், காமெடி பிரபலமுமான வடிவேலு பாலாஜி உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள அவர் கை, கால்கள் திடீரென செயல் இழந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். அது இது எது, ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வைகைப் புயல் வடிவேல் போன்ற உடல் மொழியில் ரசிகர்ளை கவர்ந்த வடிவேல் பாலாஜி, பெண் கெட்டப்புகளிலும் கலக்கியிருந்தார். அவரின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாக அமைந்தது. அவரின் மறைவை தாங்க முடியாது அவரின் குடும்ப உறுப்பினர்கள் இருக்க அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலர் இப்போதும் அவரை மறக்க முடியவில்லை, எங்களை தவிக்கவிட்டு சென்றுவிட்டார் என புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் வடிவேல் பாலாஜியின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் தனது மகனின் பிறந்தநாளை (ஜுலை 17) கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாக பலரும் வடிவேல் பாலாஜி பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர். இதோ அந்த புகைப்படம்,

Leave a Reply

Your email address will not be published.