தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. ரஜினி, கமல், விஜய், அஜித், சல்மான் கான், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன் என இவர் இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் பாடியவர். இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது. எஸ்.பி.பி அவர்கள் தனது திரைப்பயணத்தில் சுமார் 42,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் தான் பாடம் பாடல்களுக்கு எப்போது அதிக சம்பளம் கூட வாங்கியதில்லையாம் எஸ்.பி.பி. இந்நிலையில் சுமார் 50 ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து ரூ.120 கோடி மட்டுமே தனது சொத்தாக சேர்த்து வைத்துள்ளாராம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உள்ள முன்னணி கதாநாயகர்களின் ஒரே படத்தின் சம்பளமே கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் இருக்கும் நிலையில். 50 ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் இவ்வளவு தானா எஸ்.பி.பி சொத்து சேர்த்துள்ளாரா என பலராலும் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.