தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. ரஜினி, கமல், விஜய், அஜித், சல்மான் கான், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன் என இவர் இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் பாடியவர். இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவர் பூரண குணமாக தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரார்த்தனை செய்து வந்தனர். நேத்து மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார். அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்ற கேள்விக்கு எஸ்.பி.பி பதிலளித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. மீளா துயரத்தில் இருக்கும் ரசிகர்கள் அவர் குறித்த பழைய நினைவுகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. அடுத்த ஜென்மத்தில் பாடகராக பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? என்று நடிகை குஷ்பூ கேட்ட கேள்விக்க, மிகுந்த ஆர்வத்துடன் ஆமாம் என்று பதிலளிக்கிறார். எஸ்.பி.பி. அவர் மறைவின் சோகத்தில் இருந்து ரசிகர்களின் மனதை நெகிழச் செய்துள்ளது இந்த வீடியோ.
Om shanthi #SPBalasubrahmanyam sir @khushsundar pic.twitter.com/OAIhKw1fe2
— KVR (@KARTHIC_VINOBA) September 25, 2020