மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் வாழ்க்கையில் இதுவரை நடந்த நிகழ்வுகளின் அறிய புகைப்படங்கள்- இதோ…

தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். ஆனால் இன்று உடல்நல குறைவு காரணமாக மதியம் 1.04 மணி அளவில் உயிரிழந்துள்ளார் எஸ்.பி.பி. இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.

பாடகர் எஸ்.பி.பி அவர்கள் எத்தனையோ பாடல்கள் மூலம் எல்லோருக்கும் ஆறுதல் கொடுத்துள்ளார். அவர் பாடல்களை கேட்கும் போது நமது மனது அப்படியே லேசாகும். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை, இது எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து குணமாகி அந்த நோயின் தாக்கத்தால் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி கடைசியில் சிகிச்சை பலன் இன்றி நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

இவரின் மறைவிக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்களில் மூலம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல லட்சம் ரசிகர்களும் டுவிட்டர், முகநூல் என பல சமூக வலைத்தளங்களில் அவரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.பியின் திரையுலக வாழ்விலும், சொந்த வாழ்க்கையிலும் இதுவரை நடந்த நிகழ்வுகளின் அறிய புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

 

Leave a Reply

Your email address will not be published.