மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் இறுதி நிமிடங்கள்! இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ…

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. ரஜினி, கமல், விஜய், அஜித், சல்மான் கான், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன் என இவர் இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் பாடியவர். இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் மரணமடைந்தார். கொரோனா காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் பூரண குணமாக தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரார்த்தனை செய்து வந்தனர். பல திரைப்பிரபலங்கள் இவருக்காக கண்ணீர் வடித்தனர். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எஸ்பிபி குறித்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

குறித்த காணொளியில் எஸ்பிபி மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிரமப்படுகின்றார். கையில் ருத்ராச்ச மாலையை அணிந்திருக்கும் எஸ் பி பிசியோ தெரபிக்கான பயிற்சிகளை செய்கிறார். மேலும், அவரை உடன் இருக்கும் மருத்துவர்களும் உற்சாகப்படுத்தி பயிற்சியை செய்ய வைக்கின்றனர். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடுகின்றார்கள். இந்த காட்சி ஒவ்வொரு ரசிகர்களின் இதயத்தையும் நொருங்க செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.