மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளா இது? மணக்கோலத்தில் தேவதைப்போல இருக்கும் புகைப்படம் இதோ..

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் கந்தன் கருணை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மூன்று முடிச்சி படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, மூன்றாம் பிறை என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 நடிகை ஸ்ரீதேவி காலமானார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். அம்மாவின் ஆசை போலவே சினிமாவில் ஹீரோயினாகி நடித்து வருகிறார். தடக் படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிவிட்டார். சமூகவலைதளத்தில் எப்போதுமே அவர் ஹாட் ட்ரெண்டில் இயங்க காரணம் பொது இடங்களுக்கு வந்து பலரின் கண்களின் புகைப்படமாக பதிவாவதே என்று சொல்லலாம்.

படப்பிடிப்புகள் இல்லாத இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் ஓவியங்களை வரைந்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார். அந்த ஓவியங்களை போனி கபூர் அண்மையில் வெளியிட்டார். ரோஹி அபிசா, டோஸ்தான 2 என இரு படங்களில் தற்போது இணைந்துள்ள அவர் மணப்பெண்ணாக அலங்கார கோலத்தில் புகைப்படம் எடுத்து வெளியிட பலரின் கண்களை அவை கவர்ந்துவிட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!