பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், காமெடி பிரபலமுமான வடிவேலு பாலாஜி உயிரிழந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவரின் நெருங்கிய திரைப்பிரபலங்கள், நண்பர்கள் யாரும் உதவ வரவில்லை.

உறவினர்கள் தான் தங்களிடம் இருந்த பணத்தை வைத்தே அவருடைய மருத்துவ சிகிச்சையை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அது ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் தனியார் மருத்துவமனையின் அலட்சியமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று உறவினர்கள் கூறி வருகின்றனர். மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
வடிவேல் பாலாஜியின் மறைவை தொடர்ந்து அவர் குறித்த நினைவுகளை அவரது நண்பர்களான சக நடிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் புகழ் வடிவேல் பாலாஜியுடன் செய்த டிக் டாக் காணொளிகளை வெளியிட்டு உருக்கமாக பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் புகழுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். குறித்த டிக் டாக் காட்சியும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.