மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி குறித்து பல விஷயங்களை பகிர்ந்த தொகுப்பாளினி ரம்யா- வீடியோ இதோ!!

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், காமெடி பிரபலமுமான வடிவேலு பாலாஜி உயிரிழந்தார்.  நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு ரசிகர்கள், மற்றும் திரை துறையினரை கடும் அதிர்ச்சியடைய செய்தது. மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

வடிவேல் பாலாஜியின் மறைவை தொடர்ந்து அவர் குறித்த நினைவுகளை அவரது நண்பர்களான சக நடிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். தனியார் மருத்துவமனையின் அலட்சியமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று உறவினர்கள் கூறி வருகின்றனர். அவரின் மறைவை யாராலும் இன்னும் மறக்க முடியவில்லை, எல்லோரிடமும் மிகவும் சாதாரணமாக பழகக் கூடியவர்.

அவரை பற்றி பல பிரபலங்கள் தங்களது நியாபகங்களை பகிர்ந்த நிலையில் தொகுப்பாளினி ரம்யா இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், வடிவேலு பாலாஜியின் முதல் ஷோவை நான் தான் தொகுத்து வழங்கினேன். முதலில் அவரை பார்த்ததும் வடிவேலு அவர்கள் தானோ என்று தான் நினைத்தேன், அப்படியே இருந்தார். அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர் வடிவேலு பாலாஜி என பல விஷயங்கள் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.