கன்னட சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி சர்ஜா. வாயுபுத்ர படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான அர்ஜுனின் உறவினர் ஆவார். தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நாயகியாக நடித்த மேக்னா ராஜை நீண்ட காலமாக காதலித்து வந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மேக்னா ராஜ் கருவுற்றிருந்த நிலையில், இருவரும் தங்களின் முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருந்தனர். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டாராம். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட்டுடன் தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வுகளை கொண்டாடி புகைப்படங்களை மேக்னா ராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரின் இன்ஸ்டாகிரம் பக்கதில் புகைப்படத்தினை பகிர்ந்து மிகவும் உருக்கமாக கருத்து வெளியிட்டுள்ளார். அறையையே ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். ஐ லவ் யூ” என்று தெரிவித்துள்ளார்.