மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதா? மேக்னா ராஜ் இன்ஸ்டாவில் பதிவு!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி சர்ஜா. வாயுபுத்ர படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான அர்ஜுனின் உறவினர் ஆவார். இவர் நடிகை மேக்னா ராஜை கடந்த 2018 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தில் நடித்து பிரபலமானவர். நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. மாரடைப்பு காரணமாக ஜூன் 7 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மனைவி மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டாராம்.

இந்த நிலையில் அவரது மனைவிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வைரலாக பரவியது. ஆனால் அது உண்மை இல்லையாம், தனக்கு அப்படி ஒன்று நடந்தால் கண்டிப்பாக அந்த செய்தி உங்களுக்கே நான் தெரிவிக்கிறேன், வதந்தியை நம்ப வேண்டாம் என மேக்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

Youtube videos ??

A post shared by Meghana Raj Sarja (@megsraj) on

Leave a Reply

Your email address will not be published.