மறைந்த சிரஞ்சீவி சர்ஜா தனது கர்ப்பிணி மனைவியின் கையை பிடித்து செல்லும் அழகிய புகைப்படம்- இதோ..!

கன்னட சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான அர்ஜுனின் உறவினர் ஆவார். தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நாயகியாக நடித்த மேக்னா ராஜை நீண்ட காலமாக காதலித்து வந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேக்னா ராஜ் கருவுற்றிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார்.

நடிகை மேக்னா ராஜ் கணவர் உயிருடன் இல்லாததால் கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்துக் கொண்டு தன்னுடைய வளயகாப்பு நிகழ்வை நடத்தினார் அந்த புகைப்படங்களை அவரின் இணையபக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், கணவரை இழந்து நிற்கும் நடிகை மேக்னா ராஜ் சந்தோஷ படும் விதத்தில், மேக்னாராஜ் வளைகாப்பு நிகழ்ச்சியில் அவரது மறைந்த கணவர் சிரஞ்சீவி சார்ஜா அருகில் இருப்பது போன்று புகைப்படத்தை மாற்றித் தாருங்கள் என்று கரண்னிடம் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வேண்டுகோளை ஏற்ற கரண் ஆச்சாரியா, கர்ப்பிணியான மேக்னாராஜ் அருகில் அவரது கணவர் சிரஞ்சீவி சர்ஜா அவரது கையை பிடித்து நிற்பது போல் மாற்றியுள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை சிரஞ்சீவி சர்ஜாவின் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது. கரண் அந்த ரசிகரின் வேண்டுகோளுடன், மேக்னா ராஜியின் இந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *