மனைவியுடன் தூங்கிய காதலனை சரமாரியாக வெட்டிய கும்பல்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மனைவியுடன் வைத்திருந்த கள்ளக்காதலை கைவிடாத காரணத்தினால், கணவன் வீடு புகுந்த அந்நபரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஐஸ்அவுஸ் வெங்கட ரங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சரவணன்(37). இவருக்கு விஜயலட்சுமி(35) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.விஜயலட்சுமி எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் நீச்சல் பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

சரவணன் அடுக்குமாடி வீட்டின் மூன்றாவது தளத்தில் வசித்து வருகிறார். இவர் மெரினா கடற்கரையில் மீன் வியாபாரம் மற்றும் மீன் வறுவல், பஜ்ஜி கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் சரவணன் நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு மனைவி விஜயலட்சுமியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது திடீரென்று அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர், சரவணின் வீட்டிற்குல் சென்று தூங்கிக் கொண்டிருந்தவரை சரமாரியாக வெட்டினர்.

இதனால் அவர் கை துண்டானது. கணவனை காப்பாற்ற முயன்ற விஜயலட்சுமியையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.இருவரின் அலறல் சத்ததைக் கேட்டு அருகில் இருந்த மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதற்கிடையில் வந்த நபர்கள், பயங்கர ஆயுதங்களுடன் பயமின்றி அப்பகுதியில் நடந்து சென்றதால், அங்கிருந்த மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளனர்.

விரைந்து வந்த பொலிசார், சரவணன் மற்றும் விஜயலட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.முதல் கட்ட விசாரணையில், வெட்டு பட்ட சரவணன் மீன் வியாபாரம் செய்து வருவதால் அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஆட்டோ ராஜா என்பவரிடன் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனிமையில் இருந்துள்ளனர்.

மனைவியின் கள்ளக்காதலை அறிந்த ஆட்டோ ராஜா சரவணனை அழைத்து கண்டித்துள்ளார். அதன் பின் பல மாதங்கள் சரவணன், ராஜா மனைவியுடன் இருக்கும் தொடரை துண்டித்துள்ளார்.இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சரவணன், ராஜாவின் மனைவியுடன் ஒன்றாக சுற்றியுள்ளார்.இதைக் கண்ட ராஜா ஆத்திரமடைந்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரவணனை வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.குற்றவாளிகள் 5 பேரை பிடிக்க மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.