மனைவிக்கு தெரிந்து நடந்த காம லீலைகள்: பெண்களின் குளியல் காட்சியை விடிய விடிய ரசித்தேன்: அதிர வைத்த வாக்குமூலம்

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 1வது தெருவில் உள்ள இரண்டு அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில், திருச்சியை சேர்ந்த சஞ்சீவ் என்பவர் பெண்கள் விடுதி நடத்தி வந்தார். இந்த விடுதியில் ஐடி நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 10க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், விடுதியில் குளியலறை, படுக்கையறை என 16 இடங்களில் ரகசியமாக கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் ரகசிய கேமராவுடன் புகார் அளித்தனர். அதன்படி, பொலிசார் வழக்கு பதிவு செய்து விடுதி உரிமையாளர் சஞ்சீவின் அஸ்தினாபுரம் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது ஏராளமான செல்போன்கள், லேப்டாப், கணினிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில், விடுதியில் தங்கியுள்ள இளம்பெண்களின் குளியல் காட்சிகள் மற்றும் உடை மாற்றும் காட்சிகள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.

பிறகு உரிமையாளர் சஞ்சீவை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். இரவு நேரங்களில் தனது செல்போனில் ஆபாச இணையதளங்களில் குளியல் மற்றும் லெஸ்பியன் காட்சிகளை தான் விரும்பி பார்த்து வந்துள்ளார். இதை அவரது மனைவி பலமுறை கண்டித்துள்ளார். இருந்தாலும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையான சஞ்சீவ், பெண்கள் விடுதி நடத்தினால் எல்லாமே நேரடியாக பார்க்க முடியும் என்பதால் விடுதியை ஆரம்பித்து இப்படி கேமராக்களை வைத்துள்ளார். ரகசிய கேமராக்கள் பொருத்திய விவகாரம் அவரது மனைவிக்கு தெரிந்துள்ளது. இருந்தாலும் கணவர் முடிவை அவரால் தடுக்க முடியவில்லை.

 

செல்போனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குளியல் காட்சிகளை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளதாக தற்ேபாது தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக சஞ்சீவ் நெருங்கிய நண்பர்களுக்காக தனியாக வாட்ஸ் அப் குழு நடத்தி வந்தது பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்த போது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் பல இளம் பெண்கள் சிக்கி உள்ளதால் விசாரணை குறித்து வெளியில் தெரியாமல் ரகசியமாக நடத்த சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.