மத்திய பிரதேசத்தில் 117 வயது மூதாட்டி செய்த கடமை..!! வருமான வரி செய்த கௌரவம்..!!

இந்தியாவிலேயே 117 வயதில் வருமான வரி கட்டும் பெண்ணாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜா பாய் என்ற மூதாட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். வீட்டு வரி, சொத்து வரி போன்றவை கட்டுவது கட்டாயம் என அரசு விதிமுறைகளை விதித்து உள்ளது. மேலும் அவற்றை கட்ட அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் பலர் எவ்வளவு காசு கையில் இருந்தாலும் இந்த வரி கட்டுவது என்பது மட்டும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய வருமானவரித் துறையில் 160 ஆவது ஆண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் 100 வயதுக்கு மேல் வரி கட்டுபவர்கள் கவுரவித்து வருகின்றனர். அதை முன்னிட்டு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜா பாய் என்ற 117 வயது மூதாட்டி இந்தியாவில் மிக அதிக வயதில் வரி கட்டுபவர் ஆக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர் தனது வைப்புத்தொகை மீதான வட்டி மற்றும் ஓய்வூதியத்தை தனது வருமானமாகக் காட்டி அதற்காக அவர் வரி கட்டி வருகிறார். இவரை தவிர 100 வயதுக்கு மேற்பட்ட மேலும் இரு மூதாட்டிகள் இதுபோன்ற செயல்களால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். தனது நிதானம் இழந்த நிலையிலும் தனது கடமையை சரிவர செய்து வரும் இந்த பாட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!