மஞ்சிமா சிறுவயதிலேயே மலையாள சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் அதன்பிறகு 2015ஆம் ஆண்டு வெளிவந்த வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றார். இவர் நடித்த முதல் திரைப்படம் அச்சம் என்பது மடமையடா, இந்த திரைப்படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரிய வரப்பிரசாதம் போல் செம்ம ஹிட் அடித்ததால் ரசிகர் மத்தியில் எளிதில் பிரபலமானார், பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைத்தது.

பிறகு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு தற்போது மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் செம்ம மாஸ் காட்டி வருகிறார். தற்போது ஊரடங்கி சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் சீரியல் பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மஞ்சிமா மோகன் தன்னுடைய சிறுவயதில் இருந்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பத்து வருடங்களுக்கு முன்பாகத்தான் எப்படி இருந்தேன் என்று ரசிகர்கள் பார்க்கும்படி மற்றொரு புகைப்படத்தையும் விட்டுள்ளார் இந்த இரண்டு புகைப்படமும் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட்டில் வந்து நிற்கிறது. மேலும் மஞ்சிமா மோகன் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.