மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா!! எவ்வளவு தெரியுமா..

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் படத்தில் நடித்துள்ளார்.

கூடிய விரைவில் வரும் தீபாவளி அல்லது அடுத்த வருடம் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துக்லக் தர்பார், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்து வாக்குல ரெண்டு காதல் என்று பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?

இதோ.. விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு மட்டுமே ரு. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிரராம். இவரின் வீட்டின் மதிப்பு சுமார் ரு. 10 கோடி. இவர் பயன்படுத்தும் பி.எம். டபில்யூ காரின் விலை ரு 1.40 கோடி. இவரின் முழு சொத்து மதிப்பு ரு. 70 கோடி. மேலும் இவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. பிரபல தளத்தில் வெளிவந்த தகவலை உங்களுக்கு தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.