தமிழ், தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்துள்ளார்.
தனது நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்த நடிகர்கள் வரிசையில் நெப்போலியன் முக்கியமானவர். வில்லனாக மட்டுமல்லாமல் சில படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர கதாபாத்திரம்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகர் நெப்போலியனின் மூத்தமகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இதனாலேயே இவர் வீல்சேரிலேயே வாழ்க்கையையும் நகர்ந்துகிறார். நெப்போலியன் அரசியல், சினிமா என பிஸியாக இருந்தபோதே தன் மகனின் சிகிட்சை, படிப்புக்காக அமெரிக்காவுக்கு போய் குடியேறி இருந்தார்.
வீல்சேரில் இருந்தே இயங்கிவரும் நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஏ அனிமேஷன் படித்து பட்டம் வாங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான படங்களை வித்தியாசமாக வரைந்து இப்படி அசத்தியிருக்கிறார் தனுஷ். இப்போது அமெரிக்காவிலும் லாக் டவுண் என்பதால் கணினி வழியிலேயே தேர்வெழுதி பட்டம் பெற்றிருக்கிறார் தனுஷ். இதற்குப்பின்னால் நடிகர் நெப்போலியனின் பத்தாண்டு உழைப்பு இருக்கிறது.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தன் மகனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டியவகையில் தந்தையாகவும் ஜெயித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன்.