மகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட சினேகா.. குவியும் லைக்குகள்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இந்த அழகிய ஜோடிக்கு 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தான். அவனுக்கு விஹான் என்று பெயரிட்டிருந்தனர். திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் முதல் குழந்தை விஹான் பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதோடு 2020ம் ஆண்டு அதாவது இந்த வருடம் ஜனவரி 24ம் தேதி இருவருக்கும் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, மகளுக்கு ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர். ஆத்யந்தா என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள், முதலும் முடிவும் இல்லாதவள் பாரெவர் என்பது அர்த்தம் என பிரசன்னா பேட்டி ஒன்றில் கூறினார்.

இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாடடும் தனது கணவர் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறியதுடன் முன்முறையாக தனது மகன் மற்றும் மகளின் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *