கன்னத்தில் முத்தமிட்டாய் படத்தில் மாதவன், சிம்ரனுக்கு மகளாக நடித்து தேசிய விருதைப் பெற்ற பார்த்திபன் மகள் கீர்ததனாவிற்கு தீடீர் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பல திறமைகளுக்கு சொந்தக்காரரான பார்த்திபன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதும், கல்யாண வேலையில் பயங்கர பிஸியாக இருக்கிறாராம்.தற்போதும் கீர்த்தனாவிற்கு படவாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளது. ஆனால் கீர்த்தனாவோ நான் கமெராவிற்கு முன் நிற்க ஆசைப்படவில்லை….

கமெராவிற்கு பின் நிற்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டார். இதுவரை எந்தவொரு விமர்சனத்திற்கு ஆளாகாத கீர்த்தனா மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்தனா பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய் அக்கினேனியை மார்ச் 8ம் திகதி சென்னையில் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்.
தமிழ் முன்னனி நடிகர்களாக ரஜினி, கமல் இவர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் வைத்துவிட்டாராம் பார்த்திபன். இந்நிலையில் தன்னிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழும் தன் மனைவி
நடிகை சீதாவிற்கும் அழைப்பிதழ் கொடுக்கவுள்ளாராம் பார்த்திபன்.இந்நிகழ்வினால் நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் மீண்டும் இணைந்துவிட மாட்டார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.