மகன் ஸ்ரீஹரியின் தற்போதைய நிலை குறித்து மனம் வருந்திய வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ்!!

வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் தமிழில் சமுத்திரம், சொக்கத்தங்கம், தாமிரபரணி படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் மகன் விஜய் ஸ்ரீஹரி தந்தையுடன் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவர் ஆகாஷ் மற்றும் ஸ்ரீஹரியின் மனநிலை குறித்து ஆகாஷின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.அவர், ஸ்ரீஹரியின் நண்பர்கள் அனைவருக்கும் இதுகுறித்து தெரியும் என்பதால் அவர் நெருங்கிய நண்பர்களிடம் பழகுவதை கூட குறைத்துள்ளார்.

மேலும் அவரது நண்பர்களும் ஸ்ரீஹரி இருக்கும் போது இந்த சம்பவம் குறித்து எதுவும் கேட்காமலே இருப்பதாகவும், ஆனாலும் ஸ்ரீஹரி தர்மசங்கடத்துடன் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மேலும், அவர் எப்பொழுதும் மிகுந்த மன அழுத்தத்திலேயே காணப்படுவதாகவும், சமூக வலைத்தளத்தில் ஏதாவது புகைப்படம் போட்டால் அடையாளம் கண்டுபிடித்து யாராவது ஏதாவது கேட்டுவிடுவார்களோ என எண்ணி சமூகவலைத்தளங்கள் பக்கமே செல்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆகாஷ் கூறுகையில், வளர்ந்த பையனோட ஒரு அப்பாவாக நான் அவனிடம் என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை என கூறி மிகவும் வருத்தப்பட்டு பேசியதாகவும் குறித்த நண்பர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.