தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் தனுஷ். அதன்பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் தனுஷ்.
கொரோனா காலகட்டத்தில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் தனுஷ் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. சினிமாவில் எப்போதுமே பிஸியாக வலம் வரும் தனுஷூக்கு கொரோனா காலகட்டம் சிறு ஓய்வைக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் மகன் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரா என்று வியப்பில் மூழ்கியுள்ளனர். அதில் மூத்த மகன் யாத்ராவுடன் தனுஷ் இருப்பதைப் பார்த்து இன்னும் இளமையாகவே இருப்பதாக பலரும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram
When your first born wears your tshirt and argues it’s his ❤ #Yathra #Linga