மகனின் நான்காவது பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஷ்ணு விஷால் தனது மகனின் நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். விஷ்ணு விஷால் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்தும் செய்து கொண்டனர். விவாகரத்துக்கான காரணத்தை கூறிய விஷ்ணு விஷால், திருமணத்திற்கு முன்பு நான் யாரிடமும் நிறைய பேச மாட்டேன் அது என் கேரியருக்கு தடையாக இருப்பதாக கருதினேன்.

அதனால் நான் எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. ‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, என்ற இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும்.

அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன். எங்கள் மகனுக்கு முன்னுரிமை என அவனுக்குச் சிறந்தவற்றைக் கொடுப்போம் என்று கூறி இருந்தார் விஷ்ணு விஷால். தனது மனைவியை பிரிந்தாலும் தனது ஆர்யானை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார் விஷ்ணு விஷால். இப்படி ஒரு நிலையில் தனது மகளின் நான்காவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஆர்யானின் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!