தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நம் மனதில் ஒரு சில நடிகர்கள் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் தான். ஆம், அவருடைய அழகால் பல இதயங்களை கவர்ந்தவர் நடிகை மீனா அவர்கள்.
சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அது மட்டும் அல்ல, பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு மீனா நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் அக்கா, அம்மா, அத்தை என்று துணை கதாபாத்திரத்தில் நடித்து தனது இன்னிங்சை தொடர்ந்தார். தற்போதும் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். அண்மையில் அவர் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.