போஸ் வெங்கட்-சோனியா தம்பதியின் மகன், மகளை பார்த்துளீர்களா..? அட, நல்ல பெருசா வளர்ந்துட்டாங்களே..

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கி ஹிட் ஆனா படம் தான் “மௌன ராகம்” திரைப்படம், இப்படத்தில் நடிகை ரேவதியின் தங்கையாக சோனியா நடித்துள்ளார். சோனியா பிரபல நடிகரான போஸ் வெங்கட்டின் மனைவியாவார்.அதன் பிறகு சோனியா பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் கூட செங்கமலம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் அனைவருக்கும் தெரியக்கூடிய நாயகியாக பரிச்சயமானவர்.

தமிழ் சினிமாவிற்கு நன்கு பரீட்சயப்பட்ட பிரபலங்களில் ஒருவர் போஸ் வெங்கட். இவர் சினிமா பயணத்தை தொடங்கி நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு இயக்குனராகவும் தன்னை உயர்த்தியுள்ளார்.

தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துவந்த இவர் நல்ல டப்பிங் ஆர்டிஸ்டாகவும் கலக்கி வந்தார்.

படங்களை தாண்டி பல ஹிட் சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் 2003ம் ஆண்டு சோனியா என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். அவர்களின் குடும்ப புகைப்படத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சோனியா.