போஸ்டர்களுடன் வெளியான மாஸ்டர் படத்தின் நியூ அப்டேட்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ

மாநகரம் மற்றும் கைதி எனும் இரண்டு வெற்றி படங்களை இயக்கி வெற்றி இயக்குனரானவர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படம் தளபதி விஜய்யின் 64வது படம் ஆகும். இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது திரையரங்குகள் அனைத்தை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸ் என இதுவரை படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரசிகர்களுக்கு நேற்று கொண்டாட்டம் அளிக்கும் வகையில் அப்டேட் வெளியானது. ஆம் அதில் மாஸ்டர் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் மாஸ்டர் படத்தின் ட்ரைலரில் விஜய் பேசும் வசனமெல்லாம் வரும் என கூறியிருந்தார். இதை வைத்து பார்க்கும் போது மாஸ்டர் படத்தின் ட்ரைலர் அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்தின் புத்தம் புதிய போஸ்டர்கள் ரசிகர்களிடையே பரவி வருகிறது, இதோ அந்த போஸ்டர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *