போஸ்டரை பார்த்து ஷாக்கான யோகி பாபு..! இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என கூறிய யோகி..!

கவுண்டமணி செந்தில் தொடங்கி தற்போது உள்ள சிறு நகைச்சுவை நடிகர்களில் வரை என்றுமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் முக்கிய ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். இவரது கால்ஷீட் கிடைக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு இவர் புகழ் உயர்ந்து உள்ளது.

கோலாமாவு கோகிலா படத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீது காதல் வயப்பட்டத்தை அனைவரும் பார்த்து ரசித்தனர். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. கொரோனாவால் அனைவருக்கும் அவர் விருந்து வரவேற்பு வைக்க வேண்டியது தள்ளிப்போனது.

இந்நிலையில் தௌலத் என்ற படத்தில் அவர் நடித்துள்ளாராம். ஷக்தி சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மி கவுதம் என பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பு பணியில் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர் யோகி பாபு மட்டுமே இடம்பிடித்துள்ளார். இதை பார்த்த அவர் அதிர்ச்சியாகி “இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ‘தௌலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *