“போதையால் திசைமாறிய பிரபல நடிகையின் வாழ்க்கை”..! 16 வயதிலே வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன்..! ரசிகர்களை ஷாக்காகிய நடிகையின் வரலாறு..!

சினிமா பிரபலங்கள் திரையில் இருப்பது போல நிஜ வாழ்க்கையில் இருப்பார்கள் என்று எண்ணுவது தவறு. திரைக்கு பின்னால், அதாவது அவர்களது சொந்த வாழ்க்கையில் பல விஷியன்கள் நடக்கும், நடந்திருக்கும். அவை அனைத்தும் நமக்கு தெரியாது. சாதாரண மக்கள் படும் இனபங்களையும், துன்பங்களையும் அவர்கள் அனுபவித்திருப்பார்கள். தற்போது பிரபல நடிகை ஒருவர் தான் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் நடித்திருந்தார் நடிகை கங்கனா ரணாவத்.

இந்நிலையில் கங்கனா சார்பில் அவரது டீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட்டில், தான் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டத்தை கூறியுள்ளார். நான் 15, 16 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன்.  பிறகு சினிமாவுக்கு வந்தேன். ஒன்றரை, இரண்டு வருடம் போதைக்கு அடிமையாகி இருந்தேன். என் வாழ்க்கை குழப்பமாக இருந்தது. மரணம் மட்டுமே அவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றி இருக்க முடியும். நான் டீனேஜில் இருந்தபோது இதெல்லாம் நடந்தது.

அப்போது என் வாழ்வில் ஒரு நல்ல நண்பர் வந்தார். அவர் எனக்கு யோகாவை அறிமுகப்படுத்தினார். ராஜயோகா பற்றிய புத்தகத்தைக் கொடுத்தார். பிறகு சுவாமி விவேகானந்தரை என் குருவாக ஏற்றுக்கொண்டு என்னை நானே வளர்த்துக்கொண்டேன். அந்த சவாலான நேரங்கள் என் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால், நான் கூட்டத்தில் தொலைந்து போயிருப்பேன்.

 

View this post on Instagram

 

#KanganaRanaut talks about the time when she couldn’t close her eyes because tears won’t stop. ??

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on

ஆன்மிக வழிகாட்டுதல் இல்லாமல் என் மனோதிடத்தை வளர்த்துக் கொண்டிருக்க முடியாது. என் புத்தியையோ, திறமையையோ, உடல் அரோக்கியத்தையோ என்னால் வளர்த்திருக்க முடியாது. அதனால் நான் சொல்ல வருவது, இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கெட்ட நேரங்கள் மட்டுமே நல்ல நேரமாக இருக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.