இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலர் கொந்தளிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்றும் எழுதிவருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை முதன்முதலில் வெளியிட்ட உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது நக்கீரன் சமூக வலைதள பக்கம்தான். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நக்கீரனில் வெளியிட்டது தொடர்பாக. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் நக்கீரன்கோபாலை.
இன்று (15-03-2019) காலை 11 மணிக்கு சென்னை பழைய கமிஷனர் அலுவலத்தில் ஆஜராகுமாறு மத்தியக்குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
