பொள்ளாச்சி திருநாவுக்கரசு அம்மாவை வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா! பரபரப்பு வீடியோ! 18 வயது மேற்பட்டவர்கள் மற்றும் பார்க்கவும்..!!

பொள்ளாச்சி சம்பவம் நாட்டையே தலைகுனிய வைத்துள்ளது. அந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு அம்மா கொடுத்த பேட்டிக்கு பதில் சொல்லும் வகையில், அவரது தாயாரை தன் வீவீயோவில் கிழித்து தொங்கவிட்ட அறந்தாங்கி நிஷா, பெண் குழந்தைகளுக்கு அறிவுரையும் சொல்லியுள்ளார். அந்த வீடீயோவில் அவர் பேசி இருப்பதை தொடர்ந்து படியுங்கள்… கடந்த இரண்டு, மூணு நாளாவே நாம பொள்ளாச்சி விசயத்தை மட்டும் தான் பேசுறோம். பொள்ளாச்சியில் மட்டும் பெண் பிள்ளைகளுக்கு இது நடக்கல. டெய்லி, டெயிலி ஏதாச்சும் ஒரு ஊர்ல, ஒரு இடத்துல பெண்குழந்தைகளுக்கு நடந்துட்டு தான் இருக்கு. எத்தனை வருசமா பார்த்துட்டு இருக்கோம் இந்த கொடுமைகளை?

பல வருசத்துக்கு முன்னாடி பொம்பளை பிள்ளைங்க பிறந்தா கள்ளிப்பால் கொடுத்து கொல்லுவாங்களாம். இன்னும் அஞ்சாறு வருசத்துல அது வரப் போகுது. ஏன் தெரியுமா? பத்து, பதினைஞ்சு வருசம் கழிச்சு எவனோ வந்து கொல்லுறதுக்கு நம்ளே கொன்னுடலாம்ன்னு பெத்தவங்க நினைப்பாங்க. திருநாவுக்கரசோட அம்மா கொஞ்சம் கூட அறிவே இல்லாம பேட்டி கொடுத்திருக்கீங்க. உங்க பையனோட வளர்ச்சியில் யாரோ பொறாமைப்பட்டு ஒரு ஐயிட்டத்தை கூட்டிட்டு வந்து செட் பண்ணுன வீடீயோவாம் அது. அறிவு இல்ல? மூதேவி. வர்ற ஆத்திரத்துக்கு …

ஐய்ட்டம் அழுறதுக்கும் தான் நம்பி வந்தவன் ஏமாத்திட்டானேன்னு ஒருத்தி நினைச்சு நினைச்சு அழுறதுக்கும் வித்யாசம் தெரியாதா? மச்சான் இதெல்லாம் தப்புடான்னு சொல்லுறவன் தான் நண்பன். ஆனா இதெல்லாம் தப்பே இல்லடான்னு சொல்லிட்டுத்தானே எல்லாரும் இந்த வேலையை பார்க்குறீங்க. பொம்பளை பிள்ளைங்க இப்போ தாங்க அடுப்படியில் இருந்து பள்ளிக் கூடத்துக்கும்..காலேஜ்க்கும்…வேலைக்கும் வந்தாங்க. மறுபடியும் அடுப்படிக்கு கொண்டு போயிடாதீங்க. இந்த மாதிரி ரேப் கேஸ் வரும் போதெல்லாம் எந்த வக்கீலும் ஆஜராக மாட்டாங்க. அவுங்களுக்கு சல்யூட்ங்க!

நிறைய திட்டியாச்சு. இது எதையும் அரசாங்கம் செய்யாது. இன்னும் ஜஸ்வந்த்க்கு சோறு போட்டுட்டு இருக்க அரசாங்கம் தானே இது? போராடலாம். முடிவில் நாம தான் அடிவாங்கணும். இல்லைன்னா வாயிலயே சுடுவீங்க. பஸ்ல போகும் போது பின்னாடி இருந்து ஒருத்தன் இடிச்சா, காலேஜ் பொண்ணுங்களோட கண்ணு டிரைவர், கண்டகரையோ, சகதோழியையோ தேடாது. தன் கூட படிக்குற பையனைத்தான் தேடும். ஏன் தெரியுமா? தகப்பனிடம் உணரும் பாதுகாப்பை தன் நண்பனிடமும் உணருவாங்க.

தயவு செஞ்சு கூட படிக்க பொம்பளை பிள்ளைக்கு பாதுகாப்பு கொடுங்க. அவ பண்ணுறது தப்புன்னா அங்க வைச்சே அவளுக்கு அடி கொடு. நீ தேடிப் போன பத்தியா? அவன் ஒரு பொறுக்கின்னு சொல்லிக்குடுங்க. அதுக்கு உங்கஉக்கு எல்லா உரிமையும் இருக்கு. செல்போன் நோண்டும் போது பொம்பளை பிள்ளைங்ககிட்ட அம்மா சொல்லுவாங்களே, செல்போன் நோண்டாத..யாரை நம்பியும் போகாதன்னு சொல்லுறதையும் கேட்குறதில்ல…”என தொடங்கி 6 நிமிடங்களுக்கு மிகுந்த உருக்கத்தோடு பேசி வீடீயோ வெளியிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.

Leave a Reply

Your email address will not be published.