பேராண்மை படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த பெண்ணா இது? இப்போ எப்படி அடையாளமே தெரியாமல் மாறிட்டாருன்னு பாருங்க…!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த காதல் படம் மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தில் அறிமுகமான சந்தியாவின் பெயரே காதல் சந்தியா என மாறியது. பரத் இந்த படத்தில் டூவீலர் மெக்கானிக்காக நடித்திருந்தார்.

மெக்கானிக் பையன், பணக்கார வீட்டு பெண் இடையேயான காதலை உயிரோட்டத்துடன் இந்தப்படம் பேசியது. இந்தப்படம் பரத், சந்தியா இருவரது கேரியரிலும் மிக முக்கியமான படமாக இருந்தது.

இந்தப்படத்தில் சந்தியாவின் தோழியாக வந்த சரண்யா நாக், இப்போது அடையாளமே தெரியாத அளவுக்கு செம குண்டாக மாறிப் போயுள்ளார். இவர் இந்தப்படத்தில் சாதாரண துணை நடிகையாக வந்தாலும் பேராண்மை படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் 1998ல் பிரசாந்த் நடித்து, அகத்தியன் இயக்கிய ‘காதல் கவிதை’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து நீ வருவாய் என படத்திலும் குழந்தை நட்சத்திரமாக வந்தார்.

பேராண்மை திரைப்படத்திலும் முக்கியமான ரோல் செய்தார். 2015ம் ஆண்டு வெளியான ஈர வெயிலுக்கு பின்பு சரண்யா நாக் எந்த படத்திலும் வரவில்லை. இப்போது மிக, மிக குண்டாக இருக்கிறார் சரண்யா நாக். அம்மணிக்கு, தைராய்டு பிரச்னை காரணமாக உடல் எடை கணிசமாக பெருத்துப் போயுள்ளது.

இதனால் சரண்யா நாக் உடல் எடையை குறைத்துவிட்டுத்தான் மீண்டும் நடிக்க வருவது என இருக்கிறாராம். சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டீவாக இருக்கிறார்.

அதில் அவரது சமீபத்திய குண்டான படத்தைப் பார்த்தவர்கள் அடடே காதல் பட நடிகையா இது? என ஷாக் ஆகியுள்ளனர். இதோ நீங்களே இந்தப் புகைப்படத்தை பாருங்களேன்.