தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் ராதிகா நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனரான பாரதிராஜா அவர்களால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ராதிகா சரத்குமார். சீரியல் உலகில் எப்போதுமே நடிகை ராதிகா நடிக்கும் சீரியல்களுக்கும், தயாரிக்கும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புண்டு.

நடிகை ராதிகாவின் மகள் ரேயான் அபிமன்யூ மிதுன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். ராதிகா சரத்குமாரின் செல்ல மகள் ரயன் மிதுனுக்கு தாரக் என்கிற மகனும், ராத்யா என்கிற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ராதிகா தன் வீட்டு செல்லக்குட்டிகளான தாரக் மற்றும் ராத்யாவுடன் விளையாடியபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் தன் பேரன், பேத்தியின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டார்.
இந்நிலையில் ராதிகா போஸ்ட் செய்த புகைப்படங்கள் ரசிகர்கள், ரசிகைகளை கவர்ந்துள்ளது. பேரன், பேத்தியுடன் இப்படி கொஞ்சி விளையாடும் பாக்கியம் தான் பெரும் பாக்கியம். அது ராதிமாவுக்கு கிடைத்துள்ளது. அவரை இப்படி சந்தோஷமாக பார்க்க எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Don’t be afraid of enemies attacking you, be afraid of friends who flatter you… Dale Carnegie,teaching them young ? pic.twitter.com/268iwUioI3
— Radikaa Sarathkumar (@realradikaa) August 26, 2020