தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டவர் நடிகை நயன்தாரா. சரத்குமாரின் ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனித்தொடந்து சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி, ராஜா ராணி என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் தன நயன்தாரா. ஆர்.ஜெ.பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. கொரோனா தொற்றின் லாக்டவுன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நானும் ரவுடி தான் படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் எங்கும் வெளியே செல்ல முடியாததால் வீட்டிலையே முடங்கி உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் தங்களின் திருமணம் குறித்து பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில் எங்களுக்கு லவ் எப்போது போர் அடிக்கிறதோ? அப்போது நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.