பெற்ற மகன்கள் தலையில் பீர் பாட்டிலால் அடித்து கொன்ற கொடூர தாய்! மிரள வைக்கும் காரணம்!

தெலங்கானா மாநிலத்தில் கணவனுடனான குடும்பத் தகராறு காரணமாக தனது சின்னஞ்சிறு மகன்களை பாட்டிலால் அடித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் சித்திப்பேட் நகரைச் சேர்ந்த தம்பதி சித்யாலா பாஸ்கர் – சரோஜா. கார் ஓட்டூநரான பாஸ்கர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சரோஜாவை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து கணவனை பழிவாங்கத் திட்டமிட்ட சரோஜா கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில்பீர் வாங்கி வந்து வயிறு முட்ட குடித்துள்ளார்.

பின்னர் தனது இரு குழந்தைகளின் வாயிலும் துணியை வைத்து அடைத்த சரோஜா, தான் பெற்ற மகன்கள் என்கிற இரக்கமும் இல்லாமல் அவர்கள் தலையில் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகமாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டதாக செய்தியாளர்களிடம் கூறிய சரோஜா, கடைசி நேரத்தில் மனதை மாற்றிக்கொண்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்ததாகக் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published.