பெண்களை மயக்கி மலைக்கு கூட்டிச் செல்வார்! அதன் பின்? கணவனின் கொடூர முகத்தை வெளிப்படுத்திய மனைவி

தமிழகத்தில் பெண் ஒருவர் காணமல் போன வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குறித்து அவரது மனைவி சொன்ன தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்திருக்கும் பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்தவர், குட்டியம்மாள். கடந்த வாரம் ஆடு மேய்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய இவர் வீடு திரும்பவில்லை , இதனால் அம்மாவை காணவில்லை என்று குட்டியம்மாளின் மகன் கார்த்திக் தேடியுள்ளார். அப்போது கிராமத்தில் இருந்தவர்கள் குட்டியம்மாள் கடைசியாக அங்கிருக்கும் தேவந்திரன் என்பவருடன் சென்றதாக கூறியுள்ளனர். இதனால் கார்த்திக் தேவேந்திரனிடம் போய் விசாரிக்கலாம் என்ற போது தேவேந்திரன் இல்லாத காரணத்தினால், அவரது மனைவியிடம் கேட்டுள்ளார்.

அப்போது அவரது மனைவி சொன்ன தகவலைக் கேட்ட கார்த்திக் அதிர்ச்சியடைந்துள்ளார். என்னுடைய கணவர் பல பெண்களை ஆசைவார்த்தை கூறி தன் வலையில் விழ வைத்து அதன் பின் அவர்களை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிடுவார் என்று கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றை காட்டியுள்ளார். அந்த வீடியோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணமல் போன சுமதி என்ற பெண்ணை அவரது கணவர் எப்படி கொலை செய்கிறார் என்று இருந்துள்ளது.

இதனால் பயந்து போன கார்த்திக், தன் அம்மாவையும் அவர் இப்படி செய்திருக்கலாம் என்று பயந்து சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் பொலிசார் அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணமல் போன சுமதிக்கும், எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் நான் அவளுடன் நெருக்கமாக இருந்தேன். ஆனால் இது என் மனைவிக்கு தெரிந்துவிட்டதால், அவள் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள், இதனால் நான் சுமதியை மலையின் உச்சி பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்தேன்.

அதை அவள் நம்பாத காரணத்தினால் வீடியோ எடுத்து எப்படி கொலை செய்தேன் என்று அனுப்பினேன். அதே போன்று தான் குட்டியம்மாளுடன் இருந்த பழக்கமும் மனைவிக்கு தெரிந்துவிட்டதால் அதே பகுதியில் கொலை செய்தேன் என்று கூறியுள்ளான். இதையடுத்து பொலிசார் அங்கு சென்று பார்த்த போது குட்டியம்மாளின் உடல் அழுகிய நிலையிலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சுமதியின் எலும்புகளையும் பொலிசார் கண்டுபிடித்தனர். இவர்கள் இரண்டு பேர் மட்டும் தானா, அல்லது வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *