தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இவரின் தம்பி கார்த்தி விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். இவர் நடிப்பில் சூரரை போற்று படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் வாடி வாசல் எனும் படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படத்தின் 14 ஆம் ஆண்டு வெற்றி கொண்டாடப்பட்டது.

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் பூமிகா, ஜோதிகா என அழகிய நடிகைகளின் நடிப்பில் 2006ல் வெளிவந்த படம் தான் சில்லுனு ஒரு காதல். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் தான் சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் முதலில் சூர்யா நடிக்க முடியாது என்று கூற பின் ஜோதிகா சிபாரிசால் அப்படத்தில் நடித்திருக்கிறார். இருவருக்குமே இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இந்த நிலையில் இப்படம் குறித்து அண்மையில் ஒரு தகவல் வந்தது. அது என்னவென்றால் இதில் பூமிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை அசின் தானாம். அப்போது அவருக்கு வேறொரு பட கமிட்மென்ட் இருக்கவே பூமிகா நடித்துள்ளார்.