மனிதர்களைப் போலவே விழுந்து, விழுந்து சிரித்த குரங்கு!! அப்படி எதற்காக சிரித்தது தெரியுமா? நீங்களே பாருங்க!

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். இப்போது குரங்குக்கும் ஆறு அறிவு இருக்குமோ என சந்தேகப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா? உயிரியல் பூங்கா ஒன்றில் ஓராங்குட்டான் இன குரங்கு ஒன்று கண்ணாடி கூண்டில் இருந்தது. அங்கே போன வாலிபர் ஒருவர் குரங்கின் முன்பு ஒரு மேஜிக்கைக் காட்டுகிறார். அதாவது டம்ளருக்குள் ஒரு பொருளை போட்டுக் கொண்டு குரங்கு முன்பு குலுக்குகிறார். குரங்கு கண் இமைக்கும் நொடியில் அந்த பொருளை ஒளித்து வைத்துவிட்டு வெறும் டம்பளரையும், மீண்டும் டம்ளரில் பொருள் இருப்பதையும் காட்ட மனிதர்களைப் போலவே குரங்கும் விழுந்து, விழுந்து சிரிக்கிறது. இப்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.