பூங்காவில் காதலர்களை சேர்த்து வைத்த கிளி! இணையத்தில் லைக்குகளை அள்ளும் வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பூங்காவில் பெண் பயிற்சியாளர் ஒருவர், கொக்காட்டூ என்ற வகை கிளியைக் கொண்டு வந்து,  ‘இங்குள்ள யாருக்கு இந்த கிளியை அருகே வைத்து சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது, அங்கிருந்த பல பேர் கை உயர்த்த, நீல நிற ஜீன்ஸ் உடை அணிந்திருந்த பெண் ஒருவரை தேர்வு செய்தார். அப்போது, அங்கிருந்து பறந்து சென்ற கிளி, பெண்ணின் கையில் சிறிய காகித துண்டை அளித்து விட்டு மீண்டும் பறந்து வந்தது. அந்த காகிதத்தை பெண் திறந்து படிக்க ஆரம்பித்த மறுகணமே, அருகில் அவருடன் வந்திருந்த ஆண் நண்பர் ஒருவர், தனது காதலை மோதிரம் ஒன்றைக் கொடுத்து வெளிப்படுத்தினார். மேலும், அந்த காகிதத்தில் தனது காதலையே அருகிலிருந்த காதலர் வெளிப்படுத்தியுள்ளார். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் திக்கு முக்காடிப் போன பெண், மறுகணமே காதலையும் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், இது சம்பந்தமான வீடியோவை அந்த உயிரியல் பூங்கா தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, சில மணித்துளிகளிலேயே அதிக லைக்குகளை அள்ளியது.

 

Leave a Reply

Your email address will not be published.