புன்னகை அரசி!!… குழந்தை பிறந்ததும் உடல் எடை அதிகரித்து காணப்படும் நடிகை சினேகாவின் வைரல் வீடியோ!!!

தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வருபவர் நடிகை சினேகா. கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அது மட்டும் இல்லாமல் பிரசன்னா மற்றும் சிநேகா ஜோடி சேர்ந்து இன்றும் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் முதல் குழந்தை பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

ஏற்கெனவே சினேகா – பிரசன்னா தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த ஜோடிக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரசன்னா, ‘தங்கள் மகளுக்கு ஆத்யந்தா என்ற பெயர் வைத்துள்ளோம். ஆத்யந்தா என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள் என்பது பொருள்.

முதல் குழந்தை பெண்ணாக பிறக்கும் என்று நினைத்து ஆத்யாஎன்ற பெயரை தேர்வு செய்து வைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது பெண் குழந்தை பிறந்து இருப்பதால் அதே பெயரை கொஞ்சம் மாற்றி ஆத்யந்தா என வைத்து விட்டோம்’ என கூறியுள்ளார்.

இந்த நிலையில் குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன நிலையில் சினேகா ஒரு சிறிய விளம்பர படத்தில் நடித்துள்ளார் அதில் அவர் முன்பு இருந்ததை இருந்ததை விட இரு மடங்கு உடல் எடை அதிகரித்துள்ளதைக் காணொளியில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.