புத்தாண்டை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிய சினேகா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் பிரசன்னா மற்றும் சினோகா ஜோடி இருவரும் சேர்ந்து இன்றும் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். சினேகா பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் முதல் குழந்தை விஹான் பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

கொரோனா காலத்தை வீட்டில் தனது பிள்ளைகளுடன் கழித்து வரும் இவர்கள். 2021 ஆண்டை வரவேற்கும் வகையில் குடும்பத்துடன் பார்ட்டிற்கு சென்றுள்ளார்கள். புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா அவர்கள் பார்ட்டியில் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். தற்போது அந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.