புதிய கெட்டப்பில் செம கியூட்டாக மாறிய நடிகர் சிவகார்த்திகேயன்..! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று வெற்றிக் கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா மடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாதா வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக விளங்குபவர். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கனா படத்தை இயக்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை. அதனை தொடர்ந்து இவர் டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். டாக்டர் திரைப்படத்தின் பாடல்களான செல்லமா மற்றும் நெஞ்சமே உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த லாக்டவுனில் தாடியும் மீசையுமாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது கிளீன் ஷேவ் செய்து கொண்டு பார்ப்பதற்கே செம கியூட்டாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட பல ரசிகர்களும் அவரை வர்ணித்து தள்ளி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!