சமீபகாலமாக அனைவரிடமும் சீரியல் மோகம் அதிகரித்துள்ளது. முன்பு உள்ளதை போல் இல்லாமல் தற்போது காதல், நகைச்சுவை என சீரியல்கள் அனைவரது மனதையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு தனியாக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த நாடகத்தில் முல்லை, மீனா, தனம், ஜீவா, கதிர் என அதில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். அண்மையில் இந்த சீரியலில் வளைகாப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட அது டிஆர்பியில் மாஸ் வரவேற்பு பெற்றது. இப்போது மீனா என்கிற ஹேமாவிற்கு நிஜத்திலும் ஆண் குழந்தை பிறந்துள்ளது, எனவே அவர் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி குழுவினர் புதிய சீரியல் நடிகையை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை கேள்விபட்டதும் ரசிகர்கள் மீனாவிற்கு பதிலாகவா என்று பார்த்தனர். ஆனால் சீரியலில் புதிதாக இணைந்திருக்கும் சத்யா என்கிற நடிகை கண்ணனுக்கான ஜோடியாம். இவர் தமிழ் மகள், ராஜா மகள் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இதோ அந்த லேட்டஸ்ட் வீடியோ,