புதன் பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்! யாருக்கு கூரைய பிச்சிகிட்டு குபேரன் அள்ளி கொடுக்க போகிறார் தெரியுமா?

முக்கிய கிரகமான புதன் பகவானின் பெயர்ச்சி துலாம் ராசியில் இன்று நடந்துள்ளது. பொதுவாக ஒரு ராசியில் 14 நாட்கள் இருக்கக் கூடிய புதன், இந்த முறை 34 நாட்கள் தங்க உள்ளார். அதாவது செப்டம்பர் 22ம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகி, நவம்பர் 28ம் தேதி வரை துலாம் ராசியில் இருப்பார்.

இதற்கிடையே அக்டோபர் 14 முதல் நவம்பர் 3ம் தேதி வரை புதன் வக்ர நிலையும் அடைய உள்ளார். துலாம் ராசியில் புதனின் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மிக சிறப்பான பலன்கள் பெற உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி நாதனாக கொண்ட ரிஷப ராசிக்கு நட்பு கிரகமான புதன் ஆறாம் வீடான துலாமில் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசிக்கும் சுக்கிரன் ராசி நாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலையில் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். அதனால் உங்கள் செயலில் தனித்துவத்தை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் நெருக்கம் அதிகரிக்கும். திருமணத்தை நோக்கி உங்கள் உறவு செல்லும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

​மிதுனம்
ராகு கேது பெயர்ச்சியின் போது மிதுன ராசியிலிருந்து ராகு ரிஷபத்திற்கு செல்லக்கூடிய அதே நேரம், மிதுனத்தின் ராசி நாதன் புதன், துலாம் ராசியில் செல்வதால் பல நற்பலன்களைப் பெறமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் கூடிய பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும். நெருங்கிய நண்பர்களுடனும் நேரம் செலவிடுவார்.

ஒவ்வொரு பணியையும் கவனமாக செய்வீர்கள், கடனில் இருந்து விடுபடுவதற்கான உங்கள் முயற்சிகள் நல்ல முடிவுகளைத் தரத் தொடங்கும், அதே போல் வாழ்க்கையும் ஒரு புதிய மாற்றங்கள் நடக்கும். திருமண வாழ்க்கையில் ஒரு நல்ல செய்திகள் தேடி வரும்.

​கன்னி
புதன் உங்கள் ராசியிலிருந்து துலாம் ராசிக்கு செல்கிறார். இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையில் அமைதி தவழும், மேலும் உங்கள் தாய் ஆரோக்கியம் சிறக்கும், தாய் வழி உறவு மூலம் நற்பலன் கிடைக்கும். சொத்து, வாகனம் வாங்குதல் போன்றவை நடக்கும்.

தந்தையின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வணிகத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். நேர் விரயத்தை தவிர்ப்பீர். உங்கள் உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவுகள் மேம்படும் மற்றும் பணம் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

​தனுசு
ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ல் நடக்க உள்ள நிலையில், கேது தனுசு ராசியிலிருந்து 11ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்த நேரத்தில் உங்கள் செயல்பாடுகள் சாதகமான பலன்களையும், மாற்றங்களைக் காண்பீர்கள். மேலும், உத்தியோகஸ்தர்கள் வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும்.

புதனின் மாற்றத்தால் வாழ்க்கை துணையுடனான உறவு மிக சிறப்பாக இருக்கும். மேலும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு பெரிய அதிகாரியின் தலையீட்டால் உங்களின் திட்டங்கள் நிறைவடையும்.

​மகரம்
புதன் உங்கள் ராசியிலிருந்து 10 வது வீட்டிற்கு மாறுவதால் வாழ்க்கையை மேம்படுத்த பல வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், மாணவர்கள் கல்வித்துறையில் புதிய சாதனைகளைச் செய்வார்கள்.

குடும்பத்தின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும், மேலும் மனம் ஆன்மிக செயல்பாட்டில் அதிக நாட்டம் இருக்கும். வேலையற்றவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும், மன அமைதியைப் பெற ஆன்மிக தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.