சினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி பல சீரியல் நாயகிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் சொல்ல வேண்டும் என்றால் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்துவரும் சித்ராவை கூறலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.

இவருக்கும் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கும் உள்ள காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படி சித்ராவும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடிகை சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது சித்ரா அழகிய நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பாடலுக்கு அவர் நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. குறித்த காட்சியை பார்த்து ரசிகர்கள் கண் வைத்து வருகின்றனர்.