புடவையில் கொள்ளை அழகுடன் இருக்கும் தல அஜித்தின் ரீல் மகள் அனிகா!! குவியும் லைக்குகள்!

தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இவர் பின்பு பெரிய பெண்ணாக மாறியுள்ளார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தபடத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார் நடிகை அனிகா. தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளார். அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர்.

சமீபத்தில் வாழை இலையினால் ஆடையணிந்து வந்த அனிகா தற்போது புடவையில் அட்டகாசமாக தமிழ்பெண்ணாக காணப்படுகின்றார். கடந்த 22ம் திகதி ஆரம்பித்த ஓணம் பண்ணிகை செப்டம்பர் 2ம் திகதி முடிவடைவதையடுத்து, ஓணம் ஸ்பெஷல் என்று அட்டகாசமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *