பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். தமிழ் சினிமாவில் இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பட வாய்ப்பிற்காக பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது.

ஈழத்து பெண்ணான லொஸ்லியா தற்போது இரு படங்களில் ஹீரோயினாக நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். தற்போது லொஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது. ஹர்பஜன் சிங் உடன் ப்ரண்ட்ஷிப் எனும் படத்தில் நடித்து வருகிறார். லொஸ்லியா தமிழில் அறிமுகமாக உள்ள இரண்டு படங்களுக்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்நிலையில், ஊரடங்கில் அடிக்கடி இன்ஸ்டாகிரமில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றார்.
நடிகை லொஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. புடவையில் கொள்ளை அழகுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்களை மில்லியன் கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.