புடவைக்கு மேட்சாக மாஸ்க் அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை குஷ்பு! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..

தென்னிந்திய திரையுலகில் 80-90 களில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் தமிழில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டார்.

தன் கணவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் குஷ்பு. தற்போதும் குஷ்பு ரஜினிவுடனும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார். சமீபத்தில் கண்ணில் கட்டுபோட்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

தற்போது மாஸ்க் அணிந்து காரில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு கலக்கியுள்ளார். இதனையும் ரசிகர்கள் பயங்கரமாக புகழ்ந்து வருகின்றனர். காரணம் என்னவென்றால் தான் அணிந்திருக்கும் புடவையின் கலருக்கு மேட்சாக அவர் மாஸ்க் அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். சிலர் மாஸ்க்கின் கலரையும், சிலர் குஷ்புவின் அழகையும் வர்ணித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

When friends make everyday a style statement.. Thank you @malasive @samarphanam #masks #amust #newnormal ❤️❤️❤️❤️

A post shared by Khush (@khushsundar) on

Leave a Reply

Your email address will not be published.