புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பாப்பா இன்று மிகப்பெரிய பிரபலமான நடிகை.. யார் தெரியுதா..? அட..! அவரா இது?

புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி குழந்தையின் புகைப்படமும், அவர் யார் என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை. நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் குழந்தை பருவ புகைப்படம்தான் இது. தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா.

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். சினிமாவில் வாய்ப்பு தேடி தமிழ் திரையுலகிற்கு வந்த இவர் ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் சந்திரமுகி, கஜினி, பில்லா போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

தற்போது பிரபல நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடிப்பது மட்டுமில்லாமல் தனி ஒரு நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து, அந்த படங்களிலும் செம ஹிட் கொடுத்து வருகிறார் அம்மணி. இன்று சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் நயன்தாரா அவரது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்றை அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம்தான் இது.

Leave a Reply

Your email address will not be published.