வனிதா இந்த பெயர் தான் இன்று இணைய உலகத்தின் ஹாட் டாபிக். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி அவருக்கு பெரிய திருப்பத்தை தந்தது, பிறகு வனிதா செம்ம பேமஸ் ஆனார். பிறகு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார், அதன் பிறகு தான் பிரச்சனையே. அதுக்குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சு. பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு அமுலில் உள்ளதால் பீட்டர் பாலின் பிறந்தநாள் கொண்டாட வெளியே செல்ல முடியாத சூழலில் அவர் காரில் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஹேப்பி பர்த்டே மை லவ்.. குட்டிஸ் கேங்குடன் நள்ளிரவு கொண்டாட்டம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். இதேவேளை, ஊரடங்கு நேரத்தில் அவருக்கு கோவில் தரிசனம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிறந்தநாள் புகைப்படங்களை தொடர்ந்து அவர் நள்ளிரவில் காருக்குள் இருந்து வெளியிட்ட இரண்டு காணொளியும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, அவரை சுற்றி சர்ச்சைகளும், விமர்சணங்களும் எழுந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் அவரின் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். இதனை அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.