பீட்டர் பாலின் மகன்! வனித்தா காலில் விழுந்து அழுதா அப்பாவ விடுவீங்களா? என உருக்கம்..!

வனிதா பீட்டர் பால் விவாகரத்து செய்வதற்கு முன் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது இணைய ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இந்நிலையில் வனித்தா அக்காவின் காலில் விழுந்து அழுதா அப்பாவ விடுவீங்களா என்று பீட்டர் பாலின் மகன் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். இறுதியாக எலிசபெத் ஹெலனும், அவரின் மகனும் சேர்ந்து ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளனர்.

இதில் கருத்து வெளியிடும் போதே பீட்டர் பாலின் மகன் மேற்கண்டவாறு கோரியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், உங்களின் பிறந்தநாள் அன்று நான் வாழ்த்து கூற மிகவும் கஷ்டப்பட்டேன். என்னுடைய மனதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. வாழ்த்துக்கு ஒரு பதில் கூட வர வில்லை. நீங்கள் இப்படி மாறியதால் என் வாழ்க்கை மீது எனக்கு வெறுப்பு வந்து விட்டது. என்னை பற்றியும், என் தங்கையின் வாழ்க்கை பற்றியும் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் வனிதாவுடன் சேர்ந்து விட்டீர்கள்.

தங்கை கேட்டால் நான் என்ன பதில் கூற முடியும். எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தற்போது வந்து விட்டது. பார்க்கும் அனைவரும் என்னை கேள்வி எழுப்புகின்றனர். என்னை அவர்கள் பார்க்கும் விதம் தவராக உள்ளது. மிகவும் அவமானப்படுகிறேன் என்றும் உருக்கமாக பீட்டர் பாலின் மகன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவரின் மனைவியும் கண்ணீருடன் பீட்டர் பால் செய்த துரோகத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.